வீட்டை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம்

சேரங்கோடு பகுதியில் வீட்டை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. இதனால் வனத்துறை வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

Update: 2022-12-29 18:45 GMT

பந்தலூர்

சேரங்கோடு பகுதியில் வீட்டை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. இதனால் வனத்துறை வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

வீட்டை உடைத்தன

பந்தலூர் அருகே சேரங்கோடு சோதனைச்சாவடி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதியில் அடிக்கடி காட்டுயானைகள் கூட்டம் புகுந்து, பொதுமக்களின் குடியிருப்புகளை தாக்கி வருகிறது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு 7 காட்டுயானைகள் குட்டிகளுடன் புகுந்து சேரம்பாடி செல்லும் சாலையில் உலா வந்தன. பின்னர் ஊருக்குள் புகுந்து பன்னீர் செல்வம் என்பவரது வீட்டை முற்றுகையிட்டன. தொடர்ந்து அவரது வீட்ைட உடைத்து அட்டகாசம் செய்தன. இதுகுறித்து சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர், காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

வாகனம் சிறைபிடிப்பு

இதையடுத்து காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்கக்கோரி வனத்துறை வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், காட்டுயானைகள் ஊருக்குள் நுைழவதை தடுக்கவும், பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து நேற்று காலையில் அதே பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் ஒரு காட்டுயானை புகுந்தது. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். இதை அறிந்து வந்த வனத்துறையினர், காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்