வீடு புகுந்து 17 பவுன் நகை திருட்டு
வீடு புகுந்து 17 பவுன் நகை திருடபட்டது
தேவகோட்டை
தேவகோட்டை அருகே உள்ள நென்மேனி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ. இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரபா (வயது 31), தாய் சவரியம்மாள் (65) இருவரும் நேற்று 100 நாள் வேலைக்கு வீட்டை பூட்டிவிட்டு பக்கத்தில் சாவியை மறைத்து வைத்து சென்றுள்ளனர். பின்னர் யாரோ மர்ம ஆசாமிகள் சாவியை எடுத்து பீரோவில் இருந்த பிரபாவுக்கு சொந்தமான 17 பவுன் நகைகளை திருடி சென்று விட்டனர். இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.