வீடு புகுந்து 13 பவுன் நகை திருட்டு

வீடு புகுந்து 13 பவுன் நகை திருட்டுபோனது

Update: 2023-06-26 20:50 GMT

திருப்பரங்குன்றம், 

திருப்பரங்குன்றம்அருகே உள்ள கூத்தியார்குண்டு பகுதியில் வசித்து வருபவர் சிவக்குமார் (வயது 48). இவர் அவரது வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுவிட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அவர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்து 13 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த நிலையில் வீடு திரும்பிய சிவக்குமார் தன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம மனிதர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்