லாரி மோதி ஓட்டல் தொழிலாளி பலி

லாரி மோதி ஓட்டல் தொழிலாளி பலியானார்.

Update: 2023-06-17 18:29 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் அருகே உள்ள மீமிசல் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 36). இவர் கரூரில் உள்ள ஓட்டலில் சப்ளையராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சுபாஷ் சந்திரபோஷ் ஓட்டல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி சுபாஷ் சந்திரபோஸ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிேசாதித்த டாக்டர்கள் சுபாஷ் சந்திரபோஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்