ஓட்டல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

ஓட்டல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-13 19:00 GMT

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வெங்கிடுசாமி நாயுடு வீதியைச் சேர்ந்தவர் பிரசாத்(வயது 31). ஓட்டல் தொழிலாளி. இவருக்கு திருமணம் முடிந்து கலாமணி என்ற மனைவி உள்ளார். இவர்கள் 2 பேரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே குடிப்பழக்கத்திற்கு அடிமையான பிரசாத் அடிக்கடி மது அருந்திவிட்டு குடிபோதையில் வீட்டிற்கு வந்து மனைவி கலாமணியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதேபோல் கடந்த 4 நாட்களாக பிரசாத் வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு பிரசாத் வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வந்து சிறிது நேரம் கழித்து வேலைக்கு செல்கிறேன் என்று வீட்டிலேயே இருந்துள்ளார்.

இதைெதாடர்ந்து கலாமணி கடைக்கு சென்றுவிட்டு சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கலாமணி அக்கம்பக்கம் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றுபார்த்தபோது பிரசாத் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

வுிசாரணையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான பிரசாத் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்