விடுதி கண்காணிப்பாளர் போட்டித்தேர்வு -டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு
விடுதி கண்காணிப்பாளர் போட்டித்தேர்வு டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.
சென்னை,
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி), நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலைப்பணிகள் அடங்கிய துறையில், விடுதி கண்காணிப்பாளர், உடற்பயிற்சி அலுவலர் பதவிகளில் 18 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான, கணினி வழி போட்டித்தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 21-ந்தேதி நடக்கிறது. இதற்கு, வரும் நவம்பர் 16-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள நவம்பர் 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்படும். தேர்வு முடிவுகள் 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியாகும். மேலும் விவரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.