குதிரை எடுப்பு திருவிழா

திருமங்கலம் அருகே குதிரை எடுப்பு திருவிழா நடந்தது.

Update: 2023-05-03 20:16 GMT

திருமங்கலம்,

திருமங்கலம் அருகேயுள்ள செங்குளம் கிராமத்தில் அய்யனார்சாமி, வெயில்உகந்தஅம்மன், முத்தையாசாமி கோவில் உள்ளது.இந்த கோவிலின் எருதுகட்டு மற்றும் குதிரை எடுப்பு பெருவிழா 28 ஆண்டுகளுக்குப் பின்னர் செங்குளம் ஐந்து பங்காளிகள் மற்றும் கிராம மக்கள் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்றது.

அதன்படி முதல்நாள் நிகழ்வாக நேற்றுமுன்தினம் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் செங்குளம் மந்தையில் சாமி இறக்கி பின்னர் உசிலை ரோட்டில் அமைந்துள்ள வெயில்உகந்த அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து 2-ம் நாள் நிகழ்வாக நேற்று செங்குளம் மந்தையில் மருளாடிகளுக்கு சாமி இறக்கி பின்னர் மேளதாளம் முழங்கிட ஐந்து சுவாமி குதிரைகளை கண்மாய்கரை அய்யனார் கோவிலுக்கு ஊர்வலமாக சுமந்து சென்றனர். அங்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர்.

இதையடுத்து 3-ம் நாள் நிகழ்வான இன்று வடம் இழுப்பு விழா, ஸ்ரீசென்றாயப் பெருமாள் கோவில் முன்பு எருதுகட்டும் விழா மற்றும் காளைகளுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது.பின்னர் விழாவின் கடைசி நாள் நிகழ்வாக நாளை மறுநாள் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்