கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.;

Update:2022-11-11 03:46 IST

திருவெறும்பூர்:

திருவெறும்பூர் அருகே துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் திருச்சி அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சுமார் 29 கவுரவ விரிவுரையாளர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை கவுரவ விரிவுரையாளர்களுக்கு எதிராக இருப்பதாக தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பாக, கவுரவ விரிவுரையாளர்கள் திருவெறும்பூர் அரசு கலைக் கல்லூரியில் வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கவுரவ விரிவுரையாளர்களுக்கு எதிராக இருக்கும் அரசாணைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும். கவுரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கல்லூரி ஆசிரியர் பணி நியமனத்தில் பழைய வெயிட்டேஜ் முறையை பின்பற்ற வேண்டும். தேர்வு முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்