வீடு புகுந்து திருடியவர் கைது
வீடு புகுந்து திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி-நாரணாபுரம் ரோட்டில் உள்ள முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் அய்யாதுரை (வயது 43). இவரது வீட்டிற்குள் சம்பவத்தன்று ஏழாயிரம்பண்ணையை சேர்ந்த அய்யனார் என்கிற செல்வம் (37) என்பவர் அத்துமீறி உள்ளே சென்று வீட்டில் இருந்த செல்போன் மற்றும் ரூ.400 ஆகியவற்றை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அய்யாதுரை சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.