யோகா எண்டர்டைன்மெண்டின் ரோபோட் விலங்குகளின் அட்டகாசமான வீட்டு உபயோக பொருட்காட்சி புதுக்கோட்டை தடிகொண்ட அய்யனார் திடலில் நடைபெற்று வருகிறது. இதில் பலவித விலங்குகளின் உருவங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்களான ஜெயின்ட் வீல், கொலம்பஸ் கப்பல், டிராகன் ரெயில், 3 டி படக்காட்சி, பலூன் படிக்கட்டு, பிரேக்டான்ஸ் ராட்டினம், பேய்வீடு போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளது. மேலும் பெரிய அப்பளம், பானிப்பூரி போன்ற தின்பண்டங்களும் உள்ளது. இந்த பொருட்காட்சி ஜுன் மாதம் வரை மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.