கொழுந்தட்டுபுனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா சப்பர பவனி

கொழுந்தட்டுபுனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா சப்பர பவனி நடந்தது.

Update: 2022-12-05 18:45 GMT

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே உள்ள கொழுந்தட்டு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 3-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் காலையில் ஜெபமாலை நற்கருணை ஆசீர், மாலையில் டி.எம்.எஸ்.எஸ். இயக்குனர் அமலன் தலைமை வகித்து திருவிழா கொடியேற்றினார். மறை மாவட்ட பொருளாளர் சகாயம் மறையுரை வழங்கினார். விழா நாட்களில் காலை, மாலையில் சிறப்பு திருப்பலிகள் நடந்தது. நேற்று முன்தினம் காலையில் 6மணிக்கு கருமாத்தூர் விக்டர் பெர்டினால்டு தலைமையில் ஜெபமாலை, திருவிழா திருப்பலி நடைபெற்றது. குருஸ்புரம் பங்குதந்தை உபர்ட்ஸ் மறையுரை வழங்கினார். மாலை 6 மணிக்கு புனித சவேரியாரின் சப்பரபவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபட்டனர். தொடர்ந்து நற்கருணை ஆசீர் நடைபெற்றது. திருவிழா நிறைவையொட்டி நேற்று காலை 7மணிக்கு திருப்பலி, கொடியிறக்கம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை மற்றும் பங்கு இறை பணியாளர்கள், நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்