கடலில் புனித நீராடல்

காவிரி ஆறு கடலோடு கலக்கும் பூம்புகார் சங்கமத்துறையில் பொதுமக்கள் புனித நீராடினர்

Update: 2022-09-25 18:45 GMT

மகாளய அமாவாசையையொட்டி நீர்நிலைகளில் தங்களது முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர். காவிரி ஆறு கடலோடு கலக்கும் பூம்புகார் சங்கமத்துறையில் நேற்று அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் வரத் தொடங்கினர். பின்னர் அவர்கள் காவிரி மற்றும் கடலில் புனித நீராடி தங்கள் மூதாதையர் நினைவாக தர்ப்பணம் கொடுத்தனர். சுமங்கலி பெண்கள் தேங்காய், மஞ்சள், வெற்றிலை, பாக்கு உள்ளிட்ட பொருட்களை காவிரி ஆற்றில் விட்டு காவிரி அம்மனை வழிபட்டனர். பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்