எச்.ஐ.வி. விழிப்புணர்வு மாரத்தான்

எச்.ஐ.வி. விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-30 18:31 GMT

இளைஞர் விழாவினை முன்னிட்டு, எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 'ரெட் ரன் மாரத்தான்" ஓட்டம் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ஓட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக 5 கிலோ மீட்டர் சென்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஓடினர். மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான ஓட்டத்தில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்