இந்து வியாபாரிகள் நலச்சங்க கூட்டம்

இந்து வியாபாரிகள் நலச்சங்க கூட்டம் நடந்தது.

Update: 2023-01-22 21:03 GMT

வள்ளியூர்:

வள்ளியூர் வட்டார இந்து வியாபாரிகள் நலச்சங்க கூட்டம் வள்ளியூரில் நடந்தது. தலைவர் பரமசிவன் தலைமை தாங்கினார். பொருளாளர் சிவராமகுட்டி, துணைச் செயலாளர் ஆழ்வார் நம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் வி.பி.ஜெயக்குமார் கலந்துகொண்டு பேசினார். வள்ளியூர் வட்டார இந்து வியாபாரிகள் நலச்சங்கத்தை மாநில இந்து வியாபாரிகள் நலச்சங்கத்துடன் இணைக்கப்பட்டது. கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், தர்மலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்