கோவிலில் இந்து முன்னணியினர் உள்ளிருப்பு போராட்டம்

களக்காடு அருகே கோவிலில் இந்து முன்னணியினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2022-07-26 20:59 GMT

களக்காடு:

களக்காடு தோப்புத்தெரு பாடலிங்க விநாயகர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் கூறப்படுகிறது. இதனை மீட்க வலியுறுத்தி பக்தர்கள் சார்பில் அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் இந்து முன்னணியினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். எனினும் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்படவில்லை.

இந்நிலையில் இந்து முன்னணி மற்றும் பக்தர்கள் சார்பில் நேற்று கோவில் நிலத்தை மீட்க கோரி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் மீண்டும் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. இதில் இந்து முன்னணி கோட்ட தலைவர் தங்கமனோகர், மாவட்ட செயலாளர் செல்வகுமார், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரமணியன், களக்காடு ஒன்றிய செயலாளர் ஆனந்தராஜ், சேரன்மாதேவி ஒன்றிய தலைவர் கொம்பையா மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனைதொடர்ந்து வருவாய்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு வாரத்திற்குள் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலம் மீட்கப்படும் என்று உறுதி அளித்ததால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்