தயிர் பாக்கெட்டில் இந்தி - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அறிவிப்புக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-29 14:55 GMT

தயிர் பாக்கெட்டுக்களில் இந்தி வார்த்தையைப் பயன்படுத்தக் கூறும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அறிவிப்புக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து'அவர் வெளியிட்டுள்ள பதிவில் ,

"எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் (இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்), தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். மக்களின் உணர்வுகளை மதியுங்கள்!  #இந்தி திணிப்பைநிறுத்துங்கள். குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம், தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள். என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்