பட்டை நாமம் போட்டு சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பட்டை நாமம் போட்டு சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-03-10 13:10 GMT

திருப்பூர்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் காலேஜ் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் பட்டை நாமம் போட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கோட்ட தலைவர்கள் வெங்கிடுசாமி, அண்ணாத்துரை, செவந்திலிங்கம், ராஜேந்திரன் தலைமை தாங்கினார்கள்.

சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துபடி, நிரந்தரப்பயண படி, சீருடை சலவைப்படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

மாநில துணை தலைவர் ராஜமாணிக்கம் தொடங்கி வைத்து பேசினார். கோட்ட செயலாளர்கள் ராமன், தில்லையப்பன், பழனிசாமி ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினார்கள். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராணி வாழ்த்தி பேசினார். மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ் நிறைவுரையாற்றினார். முடிவில் கோட்ட பொருளாளர் முருகசாமி நன்றி கூறினார். இதில் திருப்பூர், தாராபுரம், கரூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்