உயர் கோபுர மின் விளக்கு மீண்டும் பொருத்தப்படுமா?

பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் உயர் கோபுர மின் விளக்கை மீண்டும் பொருத்த வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-06-20 19:15 GMT

கொள்ளிடம்;

பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் உயர் கோபுர மின் விளக்கை மீண்டும் பொருத்த வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயர் கோபுர மின்விளக்கு

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து தினந்தோறும் 400 விசைப்படகுகள், 350 பைபர் படகுகள் மற்றும் 200 நாட்டு படகுகள் மூலம் 6,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். மேலும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் துறைமுக வளாகத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.மாவட்டத்திலேயே சிறந்த துறைமுகமாகவும், இயற்கை துறைமுகமாகவும் இந்த பழையாறு துறைமுகம் விளங்கி வருகிறது. பழையாறு மீன்பிடி துறைமுக வளாகத்தில் கலங்கரை விளக்கம் போன்று அதிக மின் சக்தியை அளிக்க கூடிய உயர் கோபுர மின்விளக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பொருத்தப்பட்டிருந்தது.

இருண்டு கிடக்கும் துறைமுகம்

இந்த உயர் கோபுரமின் விளக்கு மூலம் அதிக வெளிச்சம் கிடைத்ததால் இரவு நேரங்களில் கடலுக்குள் சென்ற மீனவர்கள் மீண்டும் துறைமுகத்தை நோக்கி வருவதற்கு எளிதாக இருந்தது. இதைப்போல அதிகாலை நேரத்திலும் கடலில் இருந்தும் துறைமுகத்துக்கு வருவதற்கும் துறைமுகத்திலிருந்து கடலுக்குள் செல்வதற்கும் ஏற்ற வகையில் அமைந்திருந்தது.ஆனால் இந்த உயர் கோபுர மின் விளக்கு அகற்றப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. மேலும் துறைமுகமும் மின்விளக்குகள் இன்றி இருண்டு கிடக்கின்றன.இங்கு போதிய மின்விளக்கு இல்லாமல் இருந்து வருவதால் இரவு நேரங்களில் மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் முக்கிய விளக்காக இருந்து வந்த உயர் கோபுர மின் விளக்கு அகற்றப்பட்டதால் ் துறைமுகம் இருண்டு காணப்படுகிறது.

மீண்டும் பொருத்த ேகாரிக்கை

எனவே துறைமுகத்தில் தொடர்ந்து ஒளிவிசி கொண்டிருந்த உயர் கோபுர மின் விளக்கை சீரமைத்து மீண்டும் பொருத்தி ஒளிர செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்