சான்று பெற்ற விதைகள் மூலம் அதிக மகசூல்

சான்று பெற்ற விதைகள் மூலம் அதிக மகசூல் பெறலாம் என விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குனர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-29 22:13 GMT


சான்று பெற்ற விதைகள் மூலம் அதிக மகசூல் பெறலாம் என விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குனர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

சான்று விதைகள்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

சான்று விதைகள் கீழ்க்கண்ட விவரப்படி அறிந்து கொள்ளலாம். சான்று பெற்ற விதை கொள்கலனில் விதை உற்பத்தியான அட்டை, விதை சான்றளிப்பு துறையின் மூலம் வழங்கப்படும் சான்று, அட்டை எண் என இரண்டு அட்டைகள் பொருத்தப்பட்டிருக்கும்.

சான்று அட்டையில் ரகம், நிலை, விதை சான்று எண், பகுப்பாய்வு நாள், காலாவதி நாள் மற்றும் அளவு போன்ற விதை விவரங்கள் அச்சிடப்பட்டிருக்கும். உற்பத்தியான அட்டையில் விதை விவரம் மற்றும் பகுப்பாய்வு விவரங்களான புறத்தூய்மை, இனத்தூய்மை, முளைப்பு திறன், ஈரப்பதம் போன்ற விவரங்கள் அச்சிடப்பட்டிருக்கும்.

சிறுதானியம்

சான்று அட்டையில் இடப்பட்டிருக்கும் விவரங்கள் அனைத்தும் விதைக் கொள்கலன் மூட்டையில் அச்சிடப்பட்டிருக்கும்.

பயிர்களுக்கும் தரமான சான்றுவிதை, இன தூய்மை குறைந்தபட்சம் 100 சதவீதமும், ஆதார விலைக்கு 90 சதவீதமும், சான்று விதைக்கு 98 சதவீதமும் இருத்தல் அவசியம். நெல் விதைக்கு ஈரப்பதம் 13 சதவீதத்திற்கு மிகாமலும், பயறு வகை மற்றும் எண்ணெய் வித்துக்களுக்கு 9 சதவீதத்திற்கு மிகாமலும், சிறுதானியங்களுக்கு 12 சதவீதத்திற்கு மிகாமல் இருத்தல் அவசியம் சான்று விதைகளில் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடுகள் என்னவெனில் சான்று விதை மரபு தூய்மையை அதிகப்படுத்துகிறது.

தரமான சான்று

அதிக விளைச்சல், சான்று பெற்ற விதைகள், அனைத்தும் நிர்ணயித்த முளைப்பு திறன் மற்றும் ஈரப்பதத்தை கொண்டுள்ளதால் குறைந்த அளவு விதையில் அதிக விளைச்சல் மற்றும் கூடுதல் மகசூல் பெறலாம்.

சான்று பெற்ற விதைகளின் வாயிலாக எதிர்பார்த்த விதை தரம் மற்றும் பிறருக்கு விதைத்தர உத்தரவாதத்தையும் கொடுக்க முடிகிறது. உயர்விளைச்சல் பெற நல் விதை ஆதாரமாகும். எனவே மேற்குறிப்பிட்ட காரணங்களை மனதில் கொண்டு மாவட்ட விவசாயிகள் அனைவரும் தரமான சான்று பெற்ற விதைகளை வாங்கி பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்