முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை பெறுவதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோரின் குழந்தைகள் உயர்கல்வியான ஐ.ஐ.டி.எஸ்., ஐ.ஐ.எம்.எஸ். தேசிய சட்டப்பள்ளி போன்ற கல்வி நிறுவனங்களில் படிப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு 2022-23-ம் கல்வியாண்டு முதல் உயர்கல்வி ஊக்கத்தொகையாக தொகுப்பு நிதியில் இருந்து ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். இதுதொடர்பாக விவரம் தேவைப்படின் விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்புகொண்டு பயன்பெறலாம். இந்த தகவல் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.