மாஞ்சோலை பகுதியில் சுற்றித்திரிந்த யானை கூட்டம்
மாஞ்சோலை பகுதியில் யானை கூட்டம் சுற்றித்திரிந்தது.
அம்பை:
நெல்லை மாவட்டம் களக்காடு- முண்டத்துறை புலிகள் காப்பக வனப் பகுதியான மணிமுத்தாறு அருவிக்கு மேலே மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து போன்ற தேயிலை தோட்ட பகுதிகளில் வனவிலங்குகளான யானை, மிளா, மான், கரடி மற்றும் அரிய வகை குரங்குகள் பறவை இனங்கள் உள்ளது. விலங்குகள் தட்பவெப்ப சூழ்நிலைக்கேற்ப அவ்வப்போது வெளியே நடமாடும். அதன் அடிப்படையில் ஊத்து தேயிலை தோட்ட பகுதிகளில் யானை கூட்டம் சென்றதை அப்பகுதியில் சென்ற சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தற்போது சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.