விமானிகளுக்கு ஹெலிகாப்டர் பயிற்சி

விமானிகளுக்கு ஹெலிகாப்டர் பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-04-19 18:45 GMT

குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டனில் எம்.ஆர்.சி. ராணுவ முகாம் உள்ளது. இங்கு ராணுவ வீரர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியும் உள்ளது. இந்தநிலையில் நேற்று கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூருக்கு ஹெலிகாப்டர் வந்தது. குன்னூர் நகர் பகுதியில் வானில் வட்டம் அடித்தபடி, தரையில் இறங்கி மீண்டும் சென்றது. அப்போது ஹெலிகாப்டர் இயக்கம், காலநிலை மாற்றம் குறித்து விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் பயிற்சியின் போது குன்னூர் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரி அருகே ஜிம்கானா மைதானத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கி மீண்டும் வானில் பறந்தது. இதனை குன்னூர் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். சில இடங்களில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது. இதை செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்