பழனியில் வட்டமிட்ட ஹெலிகாப்டரால் பரபரப்பு

வானில் வட்டமிட்ட ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-18 16:45 GMT

பழனியில் இன்று காலை 10 மணி அளவில் வானில் ஹெலிகாப்டர் ஒன்று பறந்தது. அப்போது அந்த ஹெலிகாப்டர் திடீரென்று வானில் வட்டமிட்டபடி நகர் பகுதியை சுற்றி வந்தது.

பின்னர் அந்த ஹெலிகாப்டர் கொடைக்கானல் நோக்கி பறந்து சென்றது. பழனி நகரை சுற்றியபடி வானில் பறந்த ஹெலிகாப்டரை பொதுமக்கள், பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். எனினும் பழனியில் வானில் வட்டமிட்ட ஹெலிகாப்டரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்