நூல் வியாபாரி வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை; கடலூர் வாலிபர் சிக்கினார்

நூல் வியாபாரி வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை வழக்கில் கடலூர் வாலிபர், போலீசில் சிக்கினார்

Update: 2023-06-14 18:45 GMT

நடுவீரப்பட்டு

வாலிபர் சிக்கினார்

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி போலீசார் நேற்று கடலூர் அருகே உள்ள நடுவீரப்பட்டு கிராமத்துக்கு வந்தனர். அங்குள்ள ஒரு வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து 25 வயதுடைய வாலிபரை போலீசார் பிடித்துச் சென்றனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

70 பவுன் நகை கொள்ளை

விசாரணையில், அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த நூல் வியாபாரி திருநாவுக்கரசு(வயது 65) என்பவர் வீட்டில் கடந்த ஜூன் மாதம் 2-ந்தேதி 70 பவுன் நகைகள் கொள்ளை போனதாகவும், இந்த கொள்ளை வழக்கில் நடுவீரப்பட்டு வாலிபருக்கு தொடர்பு இருப்பதும், விசாரணைக்காக வாலிபர் பிடித்து அழைத்துச் சென்றதும் தெரியவந்தது.

70 பவுன் நகைகள் கொள்ளை வழக்கில் நடுவீரப்பட்டு வாலிபர் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்