பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

உடுமலை பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

Update: 2023-08-06 12:57 GMT

தளி

உடுமலை பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

போக்குவரத்து நெரிசல்

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலைகளில் ராஜேந்திரா சாலை போக்குவரத்திற்கு முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த சாலையில் தினசரிசந்தை பூங்கா மற்றும் இரண்டு புறங்களிலும் பல்வேறு தரப்பட்ட கடைகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் இயங்கி வருகிறது. ஒருவழிப்பாதையான இந்த சாலையின் வழியாக உடுமலை நகராட்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு வாகனங்கள் செல்கின்றது. இதனால் ராஜேந்திரா சாலை எப்போதும் பரபரப்பும் வாகன நெருக்கமும் நிறைந்தே காணப்படும்.

சந்தைக்கு வருபவர்கள் வாகனங்களை சாலையில் ஓரத்தில் நிறுத்தி விடுகின்றனர். இதனால் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

ஆம்புலன்சு

கடைகளுக்கு வருகின்ற பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். பார்க்கிங் வசதி இல்லாமல் சந்தை மற்றும் வணிக வளாகங்கள் கட்டப்பட்டதே அதற்கு காரணமாகும். அது மட்டுமின்றி நோயாளிகளை ஏற்றுக் கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் நெரிசலில் சிக்கி தவிக்கிறது. எனவே ராஜேந்திரா சாலை, தளி ரோடு, பொள்ளாச்சி ரோடு உள்ளிட்ட பிரதான சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்துபவார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி பிரதான சாலையின் இரு புறங்களிலும் கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்களில் பார்க்கிங் வசதி ஏற்படுத்துமாறு அதன் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்