வால்பாறை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல்

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால், வால்பாறை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Update: 2023-07-17 19:30 GMT

வால்பாறை

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால், வால்பாறை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குளுகுளு காலநிலை

வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை காலம் கடந்த ஜூன் மாதம் தொடங்கி விட்டது.

இந்த காலத்தில் வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படும்.ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரமடையாமல் விட்டுவிட்டு லேசாக பெய்து வருகிறது. இதனால் குளு குளு காலநிலை காணப்படுகிறது. இதன் காரணமாக வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.

கூழாங்கல் ஆறு

இதற்கிடையில் சில நேரங்களில் பெய்யும் கனமழை காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள ஆறுகள் உள்பட நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் கூழாங்கல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் நேற்று முன்தினம் வால்பாறை பகுதிக்கு வந்திருந்த பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கூழாங்கல் ஆற்றில் இறங்கி குளிக்காமல் கரையோரத்தில் நின்று குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர். ஒரு சில சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கி விளையாடினார்கள்.

போக்குவரத்து நெரிசல்

இதேபோன்று ஆபத்தை உணராமல் வால்பாறையில் இருந்து சோலையாறு அணைக்கு செல்லும் வழியில் உள்ள நீர் பிடிப்பு பகுதியில் இறங்கியும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். நேற்று முன்தினம் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் நேற்று சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதனால் வால்பாறை நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிலர், தங்களது வாகனங்களை சாலையோரத்தில் தாறுமாறாக நிறுத்தி விட்டு கடைகளுக்கு சென்று வந்தனர். இதனால் பிற வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்