பச்சைமலையில் கனமழை: நெல் பயிரிட விவசாயிகள் ஆர்வம்

பச்சைமலையில் கனமழை பெய்ததால் நெல் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

Update: 2022-09-01 18:09 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மலையாளபட்டி சுற்றியுள்ள பச்சை மலையில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சின்னமுட்லு, பூமிதானம், வெட்டுவால்மேடு, சாஸ்திரிபுரம், கவுண்டர்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆற்றைக்கடக்க முடியாமல் சிரமப்பட்டனர். நேற்று ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால் பொதுமக்கள் இயல்பாக ஆற்றை கடந்து சென்றனர். இந்த ஆண்டு பருவ மழை முன்கூட்டியே பெய்துள்ளதால் விவசாயிகள் நெல் பயிரிட ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்