கனமழை எதிரொலி: கோவை மக்களுக்கு மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.;

Update:2023-11-23 18:33 IST

கோவை, 

தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று (23-11-2023) முதல் 3 நாட்களுக்கு அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்மழை பெய்து வருவதால் பழுதடைந்த கூரை வீடுகள், மண்சுவர் வீடுகள், சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் வசித்து வரும் பொது மக்கள் மழையினால் ஏற்படும் பாதிப்பினை கருத்தில் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும் அறிவுறுத்தப்படுகிறது, என்று கூறியுள்ளார்.

மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் வெள்ளபெருக்கு அபாயம் உள்ளதால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு குளிக்கவோ, செல்பி எடுக்கவோ அருகில் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்