அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் கடந்த 4 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 6 மணியளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதேபோல் கழுமங்கலம், முணியத்தரியான்பட்டி, கச்சிப்பெருமாள், துலாரங்குறிச்சி, சூசையப்பர்பட்டிணம், இடையார், ஏந்தல், வானத்திரியான்பட்டிணம், ஒக்கநத்தம், பிலிச்சிக்குழி, காடுவெட்டாங்குறிச்சி, சோழங்குறிச்சி, பருக்கல், வெண்மான்கொண்டான், சுத்தமல்லி, ஆதிச்சனூர், நாச்சியார்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை இரவு 9 மணி வரை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால் இரவு நேரத்தில் மின்சாரம் விட்டு விட்டு வந்ததால் மக்கள் மனவேதனையில் இருந்தனர். இந்த மழையால் முந்திரி, எள், வேர்க்கடலை மற்றும் முருங்கை பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலையடைந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.