வேலூரில் பலத்த மழை

வேலூரில் நேற்று பலத்த மழை பெய்தது.

Update: 2023-07-12 19:34 GMT

வேலூரில் கோடை காலம் முடிவடைந்த பின்னரும் வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. அவ்வப்போது வெயில் 100 டிகிரி வரை பதிவானது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சாரல் மழை பெய்தது. இதையடுத்து நேற்று காலை வெயில் அடித்தது. பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் திடீரென சாரல் மழை பெய்தது.

இதையடுத்து மாலை 4.30 மணி அளவில் திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இடைவிடாது மழை வெளுத்து வாங்கியதால் வாகன ஓட்டிகள், அலுவலக பணி முடிந்து வீட்டிற்கு செல்பவர்கள், பள்ளி மாணவ- மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர். சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த மழையின் காரணமாக இரவில் குளிர்ந்த காற்று வீசியது.

Tags:    

மேலும் செய்திகள்