வேலாயுதம்பாளையம் பகுதியில் கனமழை
வேலாயுதம்பாளையம் பகுதியில் கனமழை பெய்தது.
வேலாயுதம்பாளையம், கூலக்கவுடனூர், கந்தம்பாளையம், மூலிமங்கலம், காகிதபுரம், புதுகுறுக்கு பாளையம், செக்குமேடு, மூர்த்திபாளையம், புகழூர், நாணப்பரப்பு, செம்பாடம்பாளையம், தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி, மண்மங்கலம் ஆகிய பகுதிகளில் பகல் முழுவதும், வெயில் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பின்னர் மதியம் 2 மணியில் இருந்து 3 மணி பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ேதங்கி நின்றன. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.