நெல்லை, தேனியில் பல்வேறு பகுதிகளில் கனமழை..!
நெல்லை மேலப்பாளையம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
நெல்லை,
தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, மேலப்பாளையம், கொக்கிரக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதே போல் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, கண்டமனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.