சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை..!!
சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை,
தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு சில மாவட்டங்களில் லேசானது முதல் கன மழை வரை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் தற்போது கனமழை பெய்து வருகிறது. மதுரவாயல், நெற்குன்றம், கோயம்பேடு, ஆவடி, நந்தனம், சைதாப்பேட்டை, தி.நகர், வடபழனி, கோடம்பாக்கம், ராயப்பேட்டை, பட்டினப்பாக்கம், நுங்கம்பாக்கம், மந்தவெளி, மயிலாப்பூர், கிண்டி, அடையாறு, ஆதம்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வேலைக்கு சென்று திரும்புவோர் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.