தூத்துக்குடியில் பலத்த மழை

தூத்துக்குடியில் நேற்று பலத்த மழை பெய்தது.

Update: 2022-09-01 17:00 GMT

தூத்துக்குடியில் நேற்று பலத்த மழை பெய்தது.

மழை

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் கோவில்பட்டியில் 107 மில்லி மீட்டர் மழை பெய்தது.

இந்த நிலையில் தூத்துக்குடியில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 3.30 மணியளவில் திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இந்த மழை காரணமாக தூத்துக்குடி நகரில் தாழ்வான பகுதிகள், சாலைகள், தெருக்களில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகனங்களில் சென்றவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். மாலையில் பள்ளிகள் முடியும் நேரத்தில் மழை பெய்ததால் மாணவ-மாணவிகள் நனைந்து கொண்டே வீடுகளுக்கு சென்றனர்.

இந்த மழை காரணமாக தூத்துக்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ந்த குளிர்ச்சியான சூழல் நிலவியது.

சாயர்புரம்

சாயர்புரம் பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராம பகுதியில் நேற்று மாலை 3 மணி முதல் 4 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே சாலையில் மழைநீர் ஓடியது. இதில் சாயர்புரம் பகுதியில் உள்ள கல்லூரி-பள்ளி மாணவ மாணவிகள் மழையில் நனைந்தவாறு சென்றனா். இந்த பருவமழையால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்