தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை திருவையாறு சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள், மாணவர்கள் மழையில் நனைந்தவாறு சென்றனர். தற்போது விவசாயிகள் கோடை சாகுபடியான எள், உளுந்து, சோயா பயிரிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ம்ழை கோடை சாகுபடிக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.