திருவாடானை, தொண்டி பகுதியில் கன மழை

திருவாடானை தொண்டி பகுதியில் நேற்று கன மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-09-18 18:45 GMT

தொண்டி,

ராமநாதபுரம் மாவட்டத்தின் களஞ்சியம் என அழைக்கப்படும் திருவாடானை தாலுகாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 26 ஆயிரத்து 500 எக்டேர் நிலப்பரப்பில் நெற்பயிர் சாகுபடி நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு விவசாயிகள் கடந்த ஆவணி மாதம் முதல் நெல் விதைப்பு பணிகளை தொடங்கினர். கடந்த சில வாரமாக தாலுகா முழுமைக்கும் நெல் விதைப்பு பணிகள் தீவிரமடைந்தது. தொண்டி பகுதியில் மட்டும் ஆங்காங்கே விதைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 70 சதவீதம் வரை நெல் விதைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் நெல் விதைத்து முடித்த விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை கன மழை பெய்தது. இதனால் நெற்பயிர் முளைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்