சங்கராபுரத்தில் பலத்த மழை
சங்கராபுரத்தில் பலத்த மழை வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
சங்கராபுரம்
சங்கராபுரத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் சுட்டெரித்தது. பின்னர் மாலையில் திடீரென வாகனத்தில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டன.
சில நிமிடங்களில் காற்றுடன் மழை தூறல் போட்டது. பின்னர் நேரம் செல்ல செல்ல மழையின் வேகமும் அதிகரித்தது. மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல தேங்கியது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், நேற்று பெய்த மழையால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.