ராஜபாளையம் பகுதியில் கனமழை

ராஜபாளையம் பகுதியில் பெய்த கனமழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2023-04-24 19:02 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் பகுதியில் பெய்த கனமழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கனமழை

ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர சிரமப்பட்டனர். கடும் வெயில் காரணமாக கடைவீதிகள், முக்கிய சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் நடமாட்டம் ெவகுவாக குறைந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியாபுரம், தளவாய்புரம், முகவூர், சேத்தூர், தேவதானம், கோவிலூர், ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. நள்ளிரவில் பலத்த இடியுடன் மழை பெய்தது. பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்யும் அளவிற்கு இடி, மின்னல் சத்தம் இருந்தது.

சாலையில் தேங்கிய நீர்

இந்த கனமழையினால் ராஜபாளையம்-தென்காசி சாலை, அரசு மகப்பேறு மருத்துவமனை, சங்கரன்கோவில் முக்கு, முடங்கியார் சாலை, அம்பழபுளி பஜார், மதுரை ராஜ கடை தெரு, ஆவரம்பட்டி, தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலை வரை உள்ள சாலைகள் மழைநீர் தேங்கி நின்றது.

அதேபோல் ராஜபாளையம் சத்திரப்பட்டி மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் சாலை சரி செய்யப்படாததால் அந்த பகுதியிலும் மழை நீர் தேங்கியது. திடீரென பெய்த மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. சேதமடைந்த சாலையில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்