பந்தலூர்
பந்தலூர் தாலுகா பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொன்னானி, சோலாடி, வெள்ளேரி, விலக்கலாடி, ஆறுகளிலும் நீரோடைகளிலும் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேவாலா, கூடலூர், அய்யன்கொல்லி, கொளப்பள்ளி சேரம்பாடி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. சாலைஓரங்களில் மண்சரிவும் ஏற்பட்டு உள்ளது. கடும் குளிர்மற்றும் பலத்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.