மணமேல்குடியில் பலத்த மழை

மணமேல்குடியில் பலத்த மழை பெய்தது.

Update: 2023-04-30 19:36 GMT

மணமேல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று அதிகாலை முதல் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மணமேல்குடி, தண்டலை, அம்மாபட்டிணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை 2 மணி முதல் மாலை 5 மணி வரை மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. மேலும் அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடிய நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த மழையால் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்