கரூர் மாவட்ட பகுதியில் கனமழை

கரூர் மாவட்ட பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்தது.ரெயில்வே சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

Update: 2023-09-17 18:36 GMT

பலத்த மழை

லாலாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காைலயில் இருந்து மாலை வரை வெயில் அடித்தது. இந்தநிலையில் நேற்று மாலையில் கருமேகம் சூழ்ந்து லாலாபேட்டை, மாயனூர், சித்தலவாய், மகாதானபுரம், பஞ்சப்பட்டி, கிருஷ்ணராயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

இந்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், லாலாபேட்டை, கே.பேட்டை, மாயனூர் பகுதிகளில் உள்ள ெரயில்வே சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

நொய்யல்

நொய்யல், மரவாபாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், தளவாபாளையம், புகழிமலை, காகிதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலையோர கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதி அடைந்தனர். இந்த மழையால் வாடிய பயிர்கள் துளிர் விட்டுள்ளது.

வேலாயுதம்பாளையம்

வேலாயுதம்பாளையம், புகழூர், நாணப்பரப்பு, தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், மண்மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு சுமார் அரை மணி நேரம் வரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியது. இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மழை கனமழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்