காரைக்குடியில் கனமழை

காரைக்குடியில் கனமழை பெய்தது

Update: 2023-08-08 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வெயில் அடித்தது. மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. சிறிது நேரத்்தில் மழை பெய்ய ஆரம்பித்தது. நேரம் செல்ல கனமழையாக பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழையால் இரவில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்