ஜோலார்பேட்டை பகுதியில் பலத்த மழை

ஜோலார்பேட்டை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

Update: 2022-10-13 18:02 GMT

ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதியில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் இருந்தது. பின்னர் மாலையில் திடீரென கருமேகம் சூழ்ந்து ஒரு மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள புது ஓட்டல் தெரு பகுதியில் மழை நீர் தேங்கியது. இதனால் கடை வைத்திருந்தவர்கள் அனைவரும் கடையை மூடினர்.

ஆங்காங்கே சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். 

Tags:    

மேலும் செய்திகள்