அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 3.45 மணி முதல் 4.15 மணி வரை கன மழை பெய்தது. இதன்காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அந்தியூர் குருநாத சாமி கோவில் விழாவையொட்டி சாமி கும்பிடுவதற்காக வந்த பக்தர்கள் மழையில் நனைந்தபடி சாமியை தரிசனம் செய்து சென்றனர்.
இந்தநிலையில் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் நேற்று முன்தினம் 8 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.