சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை வெள்ளம்
சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வரலாறு காணாத மழையால் கொள்ளிடம் பகுதியில் பிரதான பாசன மற்றும் வடிகால் வாய்க்காலாக இருந்து வரும் புதுமண்ணி ஆற்றில் நேற்று தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் கரை உடைந்து அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் புகுந்தது. அதனை அடைக்கும் முயற்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் ஒரு சில கிராமங்களில் வயல் எது? சாலை எது? என அடையாளம் காண முடியாத அளவுக்கு மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.