திருச்சியில் தொடர்ந்து 4 நாட்களாக தினமும் மாலை நேரம் கோடை மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை தொடங்கிய மழை நேற்று அதிகாலை வரை தொடர்ந்து சாரல் போல் பெய்தது. நேற்று பகலிலும் கத்திரி வெயில் தெரியாத அளவுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இரவு குளிர்ந்த காற்ற வீசிய நிலையில், அவ்வப்போது மின்னல் வெட்டியது. இரவு 10.30 மணிக்கு மேல் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரத்துக்கும் மேல் வெளுத்து வாங்கியது. இனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல் தா.பேட்டை பகுதியிலும் மழை பெய்தது.