ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வருவதையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2022-12-07 19:28 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வருவதையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் வருகை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக இன்று (வியாழக்கிழமை) தென்காசி வருகிறார். பின்னர் அவர் கார் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக மதுரைக்கு செல்கிறார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்நிலையம், பஸ்நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போலீசார் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீ ராமுலு தலைமையில் ெரயில்வே போலீசார் ரெயில் பயணிகளிடம் சோதனை நடத்தினார்.

அதேபோல ராஜபாளையம் ரோடு, கீழ ரத வீதி, மதுரை ரோடு ஆகிய பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தனஞ்செயன் (ராமேஸ்வரம்), கருண் காரட் (அருப்புக்கோட்டை), சபரிநாதன் (ஸ்ரீவில்லிபுத்தூர்), இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி ராஜபாளையம் பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்