குடியரசு தின விழாவையொட்டி பெரம்பலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
குடியரசு தின விழாவையொட்டி பெரம்பலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்திய குடியரசு தினவிழா இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதன்படி பெரம்பலூரில் உள்ள மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா காலை 8.05 மணியளவில் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். மாவட்டத்தின் முக்கியமான பகுதிகளில் இரவு, பகலாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதுபோல் வழிபாட்டு தலங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டங்களில் வெடிகுண்டுகளை கண்டறியும் சிறப்பு பிரிவு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவியின் மூலமும், மோப்ப நாய் உதவியுடனும் தீவிர சோதனை நடத்தினர்.குடியரசு தின விழாவையொட்டி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.