அதிக பாரம் ஏற்றி வந்த 2 லாரி உரிமையாளர்களுக்கு அபராதம்

கழுகுமலையில் அதிக பாரம் ஏற்றி வந்த 2 லாரி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-08-08 18:45 GMT

கழுகுமலை:

கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் கயத்தாறு சாலையில் சார்பதிவாளர் அலுவலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் ஜல்லி கற்களும், மற்றொரு லாரியில் எம்.சாண்டு மணலும் இருந்ததும், அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த லாரிகளின் உரிமையாளர்களுக்கு மொத்தமாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்