கரூர் மாநகராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு 9-வது வார்டு கவுன்சிலரும், கரூர் வடக்கு மாநகர காங்கிரஸ் தலைவருமான ஸ்டீபன்பாபு தலைமை தாங்கினார்.
முகாமில் சுகாதாரமாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டும். சுகாதாரத்தை பேணிகாக்க வேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பை, அபாயகரமான குப்பை தரம் பிரித்து குப்பைகளை வழங்க வேண்டும். கரூரை சுகாதாரமான மாவட்ட மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை எடுத்துக்கூறி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது. இதில் மாநகர ஆய்வாளர் பிரபாகரன், பொறியாளர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.